தமிழ் | English          அமையத்தினை பலப்படுத்தி பரவலாக்கம் செய்யும் பொருட்டு புதிய உறுப்பினர்கள் வரவேற்கப்படுகின்றனர்
முகப்பு
எம்மைப்பற்றி
உபவிதிகள்
இயக்குனர்சபை
ஆலோசனைச்சபை
அலுவலர்கள்

உறுப்புரிமை
உறுப்பினர்பட்டியல்
விண்ணப்ப நிலை
கட்டணங்கள் செலுத்த
மாணவர் அலகு

ஊடக அறிக்கைகள்
செய்திகள்

இணைப்பாளர்கள்
தொழில்நுட்பக்குழு
மற்றைய குழுக்கள்

செயற்பாடுகள்
நிகழ்வுகளின் பதிவுகள்

செயலகம்
தொடர்புகளுக்கு


நுட்பம்


@Face Book

 

எம்மைப்பற்றி

இலங்கையினை குறிப்பாக இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் ஒன்றிற்கான வெற்றிடத்தினை நிரப்பும் முகமாக, ஒரு அமைப்பினை உருவாக்குவதற்காக நேரடி சந்திப்பொன்று 15-4-2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையம் இலங்கை(நுட்பம்) என்ற பெயர் இறுதியாக்கப்பட்டு அமைய உபவிதிகளின் முன்வரைபு உருவாக்கப்பட்டு மீண்டும் 15-5-2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் கூடிய ஆரம்ப உறுப்பினர்கள்.அமைய உபவிதிகளை நிறைவேற்றியதன் மூலம் அமையம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது

இலாபநோக்கற்ற அமைப்பாக இயங்கி தமிழில் தகவல் தொழில்நுட்பம் வளர்த்தல்,தகவல் தொழில்நுட்பம் ஊடாக தமிழ் வளர்த்தல், தமிழ் தகவல் தொழில்நுட்பவியலாளர்களை ஒன்றிணைத்தல், தமிழ் மொழியின் ஊடாக சகல தமிழ் மக்களும் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ள வழிசமைத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுத்தல் எனும் நோக்கில் இவ்வமையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உறுப்பினர்களினால் உறுப்பினர் சபையில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 9 போ் கொண்ட இயக்குனர்சபை அமையத்தினை வழிநடாத்தும்.

அமையத்தின் தமிழ் சுருக்கப்பெயராக  நுட்பம் எனவும் ஆங்கில பெயராக NUDPAM எனவும் பெயரிடப்பட்டிருக்கிறது.அமையத்தின் வண்ணங்களாக நீலம் சிவப்பு மஞ்சள் ஆகிய மூன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

எமது அமையத்தின் நோக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க விரும்பும் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்கள் எம்முடைய அமையத்தின் செயலகத்துடன் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பினை செய்யமுடியும்.அத்துடன் எமது சேவை தேவைப்படும் தரப்பினரும் எம்முடன் தொடர்புகொள்ளுமிடத்து எமது ஆதரவினை நல்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

எமது முக்கிய பணிகள்

 • தமிழ் மின் உள்ளடக்கங்களினை, தமிழ் தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை ஒருங்கிணைத்தல்

 • தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கு தர வரிசை வழங்குதல்

 • தமிழ் தகவல் தொழில்நுட்ப செந்தரங்களில் சிபார்சுகளை வழங்குதல்

 • நாடெங்கிலும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்குகள் பயிலரங்குகளை நடாத்துதல்

 • மக்களுக்கும் மாணவருக்கும் தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல்

 • அரச தனியார் நிறுவனங்களுக்கு ஆலோனைகள் வழங்கல்

 • தமிழ் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் ஆய்வுகளை ஊக்குவித்தலும் வருடாந்த மாநாடு நடாத்துதலும்

 • தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தமிழ் மொழி ஒர் தடையில்லை என்பதை உறுதிப்படுத்தல்

 • தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வெளியீடுகளை தமிழ் மொழியில் மொழி பெயர்த்தல்

 • தகவல் தொழில்நுட்பம் ஊடாக தமிழ் மொழியை வளர்த்தல்

Home
About NUDPAM
Bylaws
Board of Directors
Advisory Board
Officers

Membership
Members list
Become as Member
New Application Status
Payment methods
Student Chapter

WORLD IPV6 LAUNCH is 6 June 2012 The Future is Forever

Press reports
News

Coordinators
Technical Committee
Other Committees

Events
Gallery

Secretariat
Contact
 

சகல உரிமைகளும் நுட்பம் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையத்திற்கே உரியது
All Rights reserved by NUDPAM -Tamil Information Technology Organisation 
நுட்பம் - NUDPAM 2011-2013